திருச்சி - புதுக்கோட்டை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (NH - 210) மண்டையூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது வந்து மோதிய விபத்தால் இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி 2 பேர் படுகாயம்




மண்டையூர் அருகே கார்கள், மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

நண்பர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது காதர். இவரது மகன் கலந்தர் (வயது 21). 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது மகன் அப்துல் ஆசிக் (20). 

நண்பர்களான இவர்கள் 2 பேரும் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் குண்டூரில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் மணமேல்குடியில் இருந்து புறப்பட்டு கல்லூரிக்கு மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மணமேல்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

கார்கள் மோதல்

அப்போது இரவு 8 மணியளவில் மண்டையூர் முருகன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்சியிலிருந்து காரைக்குடியை நோக்கி காரைக்குடியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் ஓட்டி வந்த காரும், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி திருச்சி உறையூரை சேர்ந்த ஜெயசூர்யா (28) என்பவர் ஓட்டிச் சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் ஜெயசூர்யா ஓட்டி சென்ற கார் கலந்தர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வந்து மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கலந்தர், அப்துல் ஆசிக் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அதேபோல கார்த்திக் ஓட்டிச்சென்ற காரில் பயணம் செய்த அவரது மனைவி அணுவும் (30) படுகாயம் அடைந்தார்.

வாலிபர் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த-மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கலந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments