கீரனூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியல்; 30 பேர் கைது




கீரனூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

கீரனூர்- புதுக்கோட்டை சாலையில் ஒதுக்குப்புறமாக இருந்த டாஸ்மாக் கடையை பஸ் நிறுத்தம் அருகே புதிய கட்டிடத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த கடையை அகற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு கீரனூர் நகர தலைவர் தீன்பாட்சா தலைமை தாங்கினார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொது செயலாளர் ஜகுபர் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி குன்றாண்டார்கோவில் ஒன்றிய இளைஞரணியை சேர்ந்த நந்தன், நகர தலைவர் சந்தனகுமார் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

30 பேர் கைது

இதையடுத்து அங்கு வந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments