ஆரஞ்சு அலர்ட்; தொண்டியில் தொடர்ந்து பெய்த கனமழையால் வீடு இடிந்து சேதம் மின்கம்பமும் சாய்ந்தது




ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. மின்கம்பமும் சாய்ந்தது.

ஆரஞ்சு அலர்ட்

ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. தொடர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் திருவாடானை தொண்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி சன்னதி மேற்கூரையில் தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் கூரை கொட்டகை சேதமடைந்தது.

ஓட்டு வீடு சேதம்

இதேபோல் தேளூர் பெரிய குடியிருப்பு அருகில் திடீரென மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மின் துறை அலுவலர்கள் மூலம் மின்தடை செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வேறு ஏதும் சேதங்கள் ஏற்படவில்லை. இதேபோல் அ.மணக்குடி கிராமத்தை சேர்ந்த அஜித் (வயது 25) என்பவருக்கு சொந்தமான மண் சுவரில் கட்டப்பட்ட ஓட்டு வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments