புதுக்கோட்டையில் வீட்டில் பதுக்கிய 100 கிலோ கஞ்சா பறிமுதல் தம்பதி உள்பட 3 பேரிடம் விசாரணை




புதுக்கோட்டையில் வீட்டில் பதுக்கிய 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தம்பதி உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டையில் ஒரு வீட்டில் கஞ்சா பண்டல், பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் புதுக்கோட்டை டவுன் பெரியார்நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்குள் தனிப்படை போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் வீட்டில் பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 100 கிலோ அளவில் கஞ்சா இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேரிடம் விசாரணை

கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தொடர்பாக அந்த வீட்டில் இருந்த வாலிபர் ஒருவரிடமும், கணவன்-மனைவியிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியவரும். முதற்கட்ட விசாரணையில், இந்த கஞ்சா பண்டல்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments