இளம்பாவயல் கிராமத்தில் வீடு இடிந்து தரைமட்டம்; குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்




ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சியில் உள்ள இளம்பாவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் அவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் திடுக்கிட்டு கண் விழித்த அவர், தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்து உடனடியாக வெளியே வந்தார். 

அடுத்த சில நொடிகளில் ஓட்டு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பத்தினர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் பக்கத்து வீட்டில் தங்கினர்.

 இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோர் ரூ.16 ஆயிரம் வழங்கி, தற்காலிகமாக வீடு கட்டும் பணியை தொடங்கினர். மேலும், தங்களுக்கு உணவுக்கு கூட வழியின்றி தவிப்பதாகவும், அப்பகுதியினர் உதவி வருவதாகவும், எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பழனிகுமார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments