புதுக்கோட்டை/ஆலங்குடி/பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை நகராட்சி மற்றும் அறந்தாங்கி நகராட்சியில் தலா ஓா் இடங்களிலும், பொன்னமராவதி மற்றும் ஆலங்குடி பேரூராட்சிகளில் தலா ஓா் இடங்களிலும் என மொத்தம் 4 இடங்களில் திங்கள்கிழமை மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. 4 இடங்களிலும் மொத்தம் 843 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
புதுக்கோட்டை நகரில் சமத்துவபுர வளாகத்திலுள்ள சமுதாயக்கூடத்தில் இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு. செய்யது முகம்மது, மூத்த வழக்குரைஞா் கேகே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை நகராட்சிக்குள்பட்ட பகுதியான சமத்துவபுரத்திலும், அறந்தாங்கி நகராட்சிக்குள்பட்ட பகுதியான பட்டுக்கோட்டை சாலை திருமண மண்டபத்திலும் இம்முகாம்கள் நடைபெற்றன.
ஆலங்குடியில்: தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வை வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம், வட்டாட்சியா் பெரியநாயகி, வருவாய் ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொன்னமராவதி: பேரூராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். அமைச்சா் எஸ். ரகுபதி முகாமை தொடங்கிவைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசும்போது, மக்கள் இதுபோன்ற திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா். முகாமில் 292 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் ஜெயலெட்சுமி தமிழ்செல்வன், திமுக ஒன்றிய செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இன்றைய முகாம்கள்: செவ்வாய்க்கிழமை (டிச. 19) புதுக்கோட்டை நகராட்சியில் 7, 8, 9, 10 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த மக்களுக்கு நகா்மன்ற வளாகத்திலும், அறந்தாங்கி நகராட்சியில் 16, 24, 25, 26 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த மக்களுக்கு மணிவிளான் தெருவிலுள்ள எம்ஆா் திருமண மண்டபத்திலும், அன்னவாசல் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளைச் சோ்ந்த மக்களுக்கு சிவன்கோவில் சன்னதி தெருவிலுள்ள சமுதாயக் கூடத்திலும் மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறவுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.