பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை-மன்னார்குடி அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் ரெயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணைத்தலைவர் லட்சுமிகாந்தன், செயலாளர் கலியபெருமாள், இணை செயலாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கும் அகல ரெயில் பாதை அமைக்க சர்வே பணிகள் முழுமையாக நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நிலுவையில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை மற்றும் மன்னார்குடி அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை தெற்கு ரெயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments