கோபாலப்பட்டிணம் - மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த தென்மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத்திற்காக வசூல்
கோபாலப்பட்டிணம் - மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த தென்மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத்திற்காக  வசூல் நடைபெற்றது 

 நேற்று 20.12.2023 புதன்கிழமை தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் ஒன்றிய கழக செயலாளர் A.நவாஸ் கான் தலைமையில்.. ரியாத் மண்டல தலைவர் நூர் முகம்மது வழிகாட்டுதலின் பெயரில், SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்சா ஒருங்கிணைப்பில் வெள்ள நிவாரணத்திற்காக ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பொய்யாநல்லூர், அரசநகரிபட்டினம், முத்துகுடா, கோபாலபட்டினம், ஆர்.புதுப்பட்டினம் பகுதிகளில் வசூல் நடைபெற்றது....

இதில் மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது, ஒன்றிய தலைவர் அபுதாஹிர், மமக ஒன்றிய செயலாளர் முத்துக்குடா வகாப், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ரூபிரபீக் மற்றும் ஆர்.புதுப்பட்டினம் மற்றும் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு வசூல் செய்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments