அறந்தாங்கி பகுதிகளில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி.8.01.2024. அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு மக்களிடம் கையெழுத்து இயக்கம் மற்றும் துண்டு பிரசுரங்களை அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வழங்கினர் .
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி.8.01.2024.
அன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு  மக்களிடம் கையெழுத்து  இயக்கம் மற்றும் துண்டு பிரச்சுரங்களை  அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வழங்கினர் 
இதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது அதில் 
1. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத 12 மணி நேர வேலை வழங்குவதை நிறுத்தி 8 மணி நேர வேலையை வழங்கவேண்டும்.
2. சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்
 3.தமிழக முழுவதும் ஆம்புலன்ஸ்களை 24×7 என முழுமையாக தங்கு தடையின்றி இயக்க வேண்டும் அதற்குத் தேவையான தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த வேண்டும் . அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் அரசுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸை வழங்க வேண்டும் ,பெண் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் கழிவறையுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்து தரவேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களுக்கு துண்டு பிரசுரத்தின் மூலம்   தெரியப்படுதினர்
இந்த நிகழ்ச்சியில் 
108 தொழிலாளர் COITU மாநில செயலாளர்  பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது
இதில் மாவட்ட செயலாளர் வீரமுத்து   மாநில காரிய கமிட்டி உறுப்பினர் அழகர் ரெனிரூபன் , ஹென்றி டேனியல், ஐஸ்வர்யா , சாக்ரடீஸ்,பிரகாஷ் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia





0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.