கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை.
கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏரிகள் முழுவதும் நிரம்பி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன் தாக்கம் தணிவதற்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கொட்டிய அதி கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் தண்ணீரில் தத்துளித்து வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  21.12.2023  வியாழக்கிழமை  காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து மிதமான மழை பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது.

மழை காரணமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 

மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில் குளம் போன்று தண்ணீர் தேங்கியுள்ளது 

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments