மணவை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்
தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக பொதுமக்கள் பலர் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து மணவை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ரூ.1.68,000 ஒரு லட்சத்து அறுபத்தி எட்டாயிரம்
 மதிப்பிலான அரிசி, பருப்பு, பிஸ்கட்,பாய், ஆடைகள்,பெட்சீட்  உள்ளிட்ட பல நிவாரண பொருட்கள் கூட்டமைப்பு கௌரவத் தலைவர்: மு.சாமியப்பன்  மற்றும் தலைவர் : உ.சோனக்கருப்பன், செயலாளர்: தாஜ்.புகாரி பொருளாலர்: இந்தியன் கணேசன் மற்றும் நிர்வாகிகள் மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா, வருவாய் ஆய்வாளர் ராஜாவிடம் வழங்கினார்கள்.
மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராத உழைத்த வியாபாரிகள் அனைவருக்கும் கூட்டமைப்பின் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்களை நிர்வாகிகள்  தெரிவித்துக் கொண்டனர்.

தகவல் : பிஸ்மி ராஜா முகமது 
(பிஸ்மி ராவுத்தர் ஹோட்டல்)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments