ஜெகதாப்பட்டினத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு கூட்டம் 23.12.2023 சனிக்கிழமையன்று  அம்மாபட்டிணம் தவ்ஹீத் மர்க்கஸில்  நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார்.

சிறப்பு பேச்சாளராக TNTJ மாநில  செயலாளர் முஹம்மது யூசுஃப் அவர்கள்
வரதட்சணை மற்றும் மூடநம்பிக்கை  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரபுரம் மீரான்
 மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லாஹ், குலாம் முஹம்மது பாட்ஷா, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் இலியாஸ்,மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரம்

முஸ்லீம் சமூகத்தினரிடத்தில் மார்கத்தில் இல்லாத வரதட்சணை மற்றும் மூடபழக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாத்தில் இல்லாத இந்த வரதட்சணை மூடப்பழக்கத்தை முஸ்லீம்களிடம் இல்லாமல் ஒழிப்பதற்கு இரண்டு மாத காலம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிட முள்ள இந்த வரதட்சணை மற்றும் மூட பழக்கத்தை ஒழிப்பதற்கு தீவிரமாய் பாடுபடுவதென்று  இச்செயற்குழு கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

2.நிவாரண உதவியை உடனடியாக வழங்கிடுக.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள் தங்கள்  வீடுகள், வீடுகளில் உள்ள பொருட்கள், ஆடு மாடுகளை இழந்து நிற்கதியாக நிற்கிறார்கள் அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரண உதவியை அவர்கள் பாதிக்கப்பட்ட அளவுக்கு உதவிடுமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம் .


3*நன்றி அறிவிப்பு*

கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவித்திருக்கிறார் கர்நாடக முதல்வரின் இந்த தடை நீக்க அறிவிப்பை இச்செயற்குழு கூட்டம் வரவேற்று அம்மாநில அரசிற்கு நன்றி தெறிவிக்கிறது.

4.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கிருஷ்ணாஜி பட்டினம் பேருந்து பஸ் ஸ்டாப்புகளில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென போக்குவரத்து  மேலாளர் ஆணையிட்டும் பல  பேருந்துகள் நிற்காமல் செல்கிறது இதுதொடருமானால் மக்கள் அழைத்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

5.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆடு மாடுகள் சாலைகளில் திரிகிறது,இரவு நேரங்களில் மாடுகள் சாலைகளில் படுத்து கிடக்கிறது  இதனால்
அதிகமான விபத்துகள் ஏற்படுகிறது .இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு செயற்குழு கூட்டமாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 6*நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்க*

. தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.   ஆனால்  நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படுவது இல்லை.
அறிஞர் அண்ணாபிறந்த தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதற்காக உரிய பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாக 
அறிகிறோம் , இம்முனெடுப்பு பாராட்டுக்குரியது அதே நேரத்தில் இறுதி வரை இச்சிறைவாசிகளின் விடுதலைக்காக உரிய முயற்சிகளை எடுத்து அவர்களின் விடுதலைய உறுதி செய்ய வேண்டும் என  இச்செயல்வீரர்கள் கூட்டம் வாயிலாக 
கேட்டுக்கொள்கிறோம். 

சிறைச்சாலைகளில் நோயினால் பாதிக்கப்பட்டு சில இஸ்லாமிய சிறைவாசிகள் மரணமடைந்துள்ள வேளையில் , மீதம் உள்ளவர்களையாவது விடுதலை செய்வது சமநீதியை நிலைநாட்ட உறுதியான 
நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுக்க வேண்டும், வழக்கம் போல் ஆளுநர் மீது பழி போடாமல் நீட் விவாகரத்தில் எவ்வாறு ஆளுநரை எதிர்த்து பணிகள் நடைபெறுகிறதோ அது போன்று 
இவர்களை நியாயமான முறையில் விடுதலை செய்வதற்கான சட்ட முன்னெடுப்புகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்த இச்செயற்குழு கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 


7 . இடஓதுக்கீட்டை உயர்த்துக ! , வெள்ளை அறிக்கை வெளியிடுக

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது,  மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு சரியாக வழங்கப்படாமல் அலைக்களிக்கப்படுகின்றனர்
ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை. இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடிகளும் உள்ளன
தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் , தமிழகத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை
7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இந்த செயற்குழு கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments