மணமேல்குடியில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
மணமேல்குடி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில், தற்போது சாகுபடி செய்யப்பட்டு வரும் சம்பா நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இலைசுருட்டு புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. அனைத்து பணியாளர்களும் வயல்வெளி கள ஆய்வு செய்து மேலாண்மை முறைகளை எடுத்துக்கூறி வருகிறார்கள். எனவே விவசாயிகள் அதிகமாக பாதிப்பு ஏற்படுவதற்குள் மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும். வேளாண்மை கிடங்கில் உள்ள நுண்சத்து உயிர் உரங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினார். கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் கந்தகிரிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments