புயல், வெள்ளம் பாதித்த 10 மாவட்டங்கள்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு





தமிழகத்தின் 10 மாவட்டங்களை புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களை புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அசராணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழக மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், 10 மாவட்டங்களை புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments