பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் 31.12.2023 முதல் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் இயங்கும்
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் 31.12.2023 முதல் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் இயங்கும் என தகவல்

இது குறித்து பட்டுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் அவர்கள் கூறுகையில் 

 (31.12.2023)முதல்  ஞாயிற்றுகிழைகளிலும் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் இரயில் முன்பதிவு மையம் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து அனைத்து நாட்களிலும்  செயல்படும். அனைவரும்  முன்பதிவு,தட்கல் முன்பதிவு மற்றும் பயணச்சீட்டு ரத்து செய்யவும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு பட்டுக்கோட்டை இரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் அதிக முன் பதிவு செய்வது ஞாயிற்றுகிழமைகளில் முன்பதிவு மையம்தொடர்ந்து செயல்பட உதவும் அதனால் இந்த வாய்ப்பை அனவரும் பயண்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பட்டுக்கோட்டை இரயில் பயணிகள் நல சங்கம் சார்பாக. வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த
திருச்சி இரயில்வே கோட்ட மேலாளர் அவர்களுக்கும் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் மற்றும் கோட்ட வர்த்தக மேலாளர் அனைவருக்கும் பட்டுக்கோட்டை இரயில் பயணிகள் நல சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments