6 வந்தே பாரத் ரயில், 2 அம்ரித் பாரத் ரயில்கள் சேவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. அது என்ன அம்ரித் பாரத் ரயில்?




அம்ரித் பாரத் ரயில்கள் என்பது ரயில்வே தரவுகளின் படி, ஏசி பெட்டிகள் இல்லாத ரயில்களாகும். இந்த வகை ரயில் பெட்டிகளின் முன்பும் பின்னரும் இன்ஜின்கள் இருக்கும்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில்வே நிலையத்தை அவர் திறந்துவைத்தார். மேலும் 15,700 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

அயோத்தியா தாம் ஜங்க்ஷன் ரயில் நிலையத்தில்  புதிய வகை சூப்பர் பாஸ்ட்  பயணிகள் ரயிலான அம்ரித் பாரத் ரயிலையும்  பிரதமர் மோடி நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இது மட்டுமின்றி, 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை  பிரதமர் திறந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜம்முகாஷ்மீரின் கத்ரா- டெல்லி இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில், அமிர்தசரஸ்-டெல்லி இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும்,கோவை-பெங்களூரு கண்டோன்மென்ட், மங்களூரு-மத்கோன் இடையே வந்தே பாரத் ரயில் மற்ரும் ஜல்னா-மும்பை இடையே ஒரு வந்தே பாரத் விரைவு ரயிலும், அயோத்யா-ஆனந்த் விஹார் இடையே ஒரு வந்தே பாரத் விரைவு ரயிலும் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில் சேவைகளாகும்.

இது மட்டுமின்றி 2,300 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 3 ரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரயில் சேவைகளை மின்மயமாக்கும் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அம்ரித் பாரத் ரயில் என்றால் என்ன? எப்படி இருக்கும்?

அம்ரித் பாரத் ரயில்கள் என்பது ரயில்வே தரவுகளின் படி, ஏசி பெட்டிகள் இல்லாத ரயில்களாகும். இந்த வகை ரயில் பெட்டிகளின் முன்பும் பின்னரும் இன்ஜின்கள் இருக்கும்.வண்ணமயமாக மாற்றப்பட்ட இருக்கைகள்,லக்கேஜ்கள் வைக்க போதுமான வசதி,மொபைல் சார்ஜிங் வசதி, சிசிடிவி கேமிராக்கள், பொது தகவல் அமைப்பு இடம்பெற்றிருக்கும்.

புதிய அம்ரித் பாரத் ரயில்களில் பயணம் செய்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பீகாரில் உள்ள தர்பாங்கா- உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்யா - டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார்  இடையே ஒரு அம்ரித் பாரத் ரயிலும்., மேற்குவங்கத்தில் உள்ள மால்டா டவுன்- பெங்களூருவில் உள்ள விஷ்வேஷ்வரய்யா  ரயில் நிலையங்களை இணைக்கும் அம்ரித் பாரத் ரயிலும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

வந்தே பாரத் ரயில்கள் மட்டுமின்றி அம்ரித் பாரத் ரயில்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில் ஏராளமான அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments