கன்னியாகுமரி - பனாரஸ் (காசி) இடையே காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் புதிய வாரந்திர ரயில் இயக்க இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல்






காசி தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் காசி - கன்னியாகுமரி இடையே புதிய ரயிலை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ஆன்மீக திருத்தலங்கள் வழியாக கன்னியாகுமரி - பனாரஸ் இடையே காசி தமிழ் சங்கமம் வாராந்திர   ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

 சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஹிந்து மதத்தின் தலைமை இடமான காசியில் பிரமாண்டமான காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தியது. அதில் பங்கேற்ற மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அந்த நிகழ்வை குறிக்கும் விதமாக தமிழகத்தில் இருந்து காசி நகருக்கு நேரடி ரயில்  காசி தமிழ் சங்கமம்   என்ற பெயரில் இயக்கப்படும் என அறிவித்தார். 

காஞ்சிபுரம் வழியாக சங்கர மட கிளைகள் உள்ள இடங்களையும் காசி மாநகரையும் இணைக்கும் வகையில் நேரடி ரயில் இயக்க தன்னை சந்தித்த மத்திய தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் திரு எல். முருகன் அவர்களிடம் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விருப்பம் தெரிவித்தார்.  அதனை  நினைவு கூர்ந்து உத்தேசிக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் ரயிலை தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், காஞ்சிபுரம் வழியாக இயக்க திரு எல். முருகன் அவர்களிடம் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. 

இதே கோரிக்கையை மயிலாடுதுறை எம்.பி. திரு எஸ். ராமலிங்கம் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

அதையடுத்து  தற்போது கன்னியாகுமரி - பனாரஸ் இடையே காசி தமிழ் சங்கமம் ரயில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூர், குருர், விஜயவாடா, பல்ஹர்ஷா, கோண்டியா , ஜபல்பூர், பிரயாக்ராஜ் & வாரணாசி வழியாக நேரடி  வாராந்திர ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

 நிர்வாக நடைமுறைகளுக்குப் பின் ரயில் இயக்கம் தொடக்கம் குறித்து விரைவில் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட உள்ளது. அடுத்த வாரம் காசி மாநகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பகுதியாக ஆன்மிக தளங்களை இணைக்கும் காசி தமிழ் சங்கமம் ரயில் இயக்கம் தொடங்கப்பட்டால் சிறப்பாக அமையும். 

கன்னியாகுமரி - பனராஸ் 

வாரம் ஒருமுறை இயக்கப்படவுள்ள இந்த விரைவு ரயிலானது ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.55 க்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை இரவு 11.35 க்கு பனாரஸ் ரயில் நிலையத்தை சென்றடையும்

பனராஸ் - கன்னியாகுமரி 

மீண்டும் அங்கிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.20 க்கு புறப்பட்டு  செவ்வாய்க்கிழமை இரவு 8.55 க்கு கன்னியாகுமரி வந்தடையும்.

நிறுத்தங்கள்

நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், சிர்பூர், ககாஸ்நகர், பால்ஹர்ஷா, கோண்டியா, பாலகாட், நைன்பூர், ஜபல்பூர், கட்னி, மைஹர், சத்னா, மாணிக்பூர், பிரக்யாராஜ் மற்றும் வாரணாசி

வண்டி எண் : 16367 & 16368

இந்த ரயிலில் 1st AC - 1, 2nd AC - 2, 3rd AC - 3, 3rd Economic AC - 3, sleeper - 6, UR - 4, SLRD - 1, pantry coach -1, generator - 1 என 22 எல்.எச்.பி வகை பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் தொடங்கி வைக்கப்படும் தேதி விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே வாரியம் கூறியுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments