ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் இயல்பை விட 14% கூடுதல் மழை






ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 827 மி.மீ. ஆகும். 2022-ம் ஆண்டு 678.53 மி.மீ. மட்டுமே மழை பெய்தது. இது சராசரியை விட 148.47 மி.மீ குறைவாகும். அதனால் அரசால் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
 
இந்நிலையில், 2023-ம் ஆண்டில் 940.81 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 113.81 மி.மீ கூடுதலாகும். அதாவது 14 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதனால் மாவட்டத்தில் 1.39 லட்சம் ஹெக்டேர் நெல், 15 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மிளகாய் மற்றும் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த முறை நெல், சிறுதானிய பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம், கடந்த டிசம்பரில் பெய்த கன மழையால் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெற்பயிரும், 13 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மிளகாய், ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மல்லி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பெய்த மழையளவு (மி.மீ.ல்) விவரம 

2014-ம் ஆண்டில் 946.54,
2015-ல் 1113.99, 
2016-ல் 307.8, 
2017-ல் 599.94, 
2018-ல் 663.67, 
2019-ல் 914.25, 
2020-ல் 845.36, 
2021-ல் 1098.55, 
2022-ல் 678.53, 

2023-ல் 940.81 மி.மீ. மழையளவு பதிவானது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments