பிரதமர் மோடி வருகையையொட்டி புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு போக்குவரத்து மாற்றம்


பிரதமர் நரேந்திரமோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திருச்சிக்கு வருகை தருவதை முன்னிட்டு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனரக வாகனங்கள் (லாரிகள்)

இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி.கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

பஸ்கள்

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோவை மற்றும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்து பஸ்களும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

கட்சியினரின் வாகனங்கள்

பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வரும் கட்சி தொண்டர்களின் வாகனங்கள் நாளை காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.

குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகை

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சி செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் (லாரிகள்) இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கட்டியாவயல், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, மணிகண்டம், மன்னார்புரம் சந்திப்பு வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டும். இன்று இரவு 8 மணி முதல் கீரனூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் சூரியூர், ஓ.எப்.டி. நவல்பட்டு, திருவெறும்பூர் வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டும்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் நார்த்தாமலை, கீரனூர் பிரிவுரோடு குளத்தூர் பிரிவுரோடு, இலுப்பூர், விராலிமலை, மணிகண்டம், மன்னார்புரம் சந்திப்பு வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டும்.

பஸ்கள்

நாளை காலை 7 மணி முதல் ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் அனைத்து பஸ்களும், கட்டியாவயல், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, மணிகண்டம், மன்னார்புரம் சந்திப்பு வழியாக திருச்சிக்கு செல்லவேண்டும். இதேபோல கீரனூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் சூரியூர், ஓ.எப்.டி. நவல்பட்டு, திருவெறும்பூர் வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் அனைத்து பஸ்களும், நார்த்தாமலை, கீரனூர் பிரிவுரோடு, குளத்தூர் பிரிவுரோடு, இலுப்பூர், விராலிமலை, மணிகண்டம், மன்னாா்புரம் சந்திப்பு வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டும். திருச்சி விமானநிலையத்திற்கு செல்லும் கட்சியினரின் வாகனங்கள் பிரதமர் மோடியை வரவேற்க விமானநிலையத்திற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்களின் வாகனங்கள் நாளை காலை 9 மணி வரை மட்டுமே திருச்சி சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். மேற்கண்டதகவலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments