S.P.பட்டினம் அல் அல்ஹாம் அரக்கட்டளை சார்பாக குத்ஸிகள் பேரவை இணைந்து நடத்திய கருத்தரங்கம்.!




S.P.பட்டினம் அல் அல்ஹாம் அரக்கட்டளை சார்பாக குத்ஸிகள் பேரவை இணைந்து சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் 30.12.2023 அன்று அல் அல்ஹாம் அரக்கட்டளை சார்பாக குத்ஸிகள் பேரவை இணைந்து சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஜமாஅத்தார் முன்னிலையில் பாக்கவி அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் அல் அர்ஹாம் அரக்கட்டளையின் செயளாலரும் ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வருமான K.A.அப்துல் கைய்யூம் மௌலானா பாகவி ஆலிம் அவர்கள் தலைமை தாங்கி நடத்த மதரஸா மாணவர்கள் கிராஅத் ஓதி நஷீதா படித்தனர். மௌலவி நழீபுத்தீன் பாகவி ஆலிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, அதை தொடர்த்து மௌலவி நிஃமதுல்லாஹ் பாக்கவி ஆலிம் மற்றும் ஜமாஅத் தலைவர் மௌலவி ஹசன் அலி பாஃழில் ஜமாலி ஆலிம் அவர்களும், ஜனாப் முஹம்மது முக்தார் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

அன்வாருல் குத்ஸிய்யா மதரஸாவின் பேராசிரியரும் குத்ஸிகள் பேரவையின் செயளாலருமான மௌலவி முஹம்மது சலாஹுத்தீன் குத்ஸி ஆலிம் அவர்கள் குத்ஸிகள் பேரவை பற்றி அறிமுக உரையாற்றினார். அதில் அன்வாருல் குத்ஸியாவில் பட்டம் பெற்று வெளியில் சென்று சமூக சேவை செய்ய குத்ஸிகள் பேரவை என்ற ஒன்றை உருவாக்கி
👉 திருமண நிதி உதவி
👉 மருத்துவ நிதி உதவி
👉 மாணவர்கள் கல்வி கற்க நிதி உதவி
இது போன்ற என்னற்ற சேவைகள் செய்து வருவதை ஆண்டறிக்கையாக தொகுத்து வழங்கினார். 

மேலும் அல் அன்வார் குத்ஸிய்யா அரபிக்கலூரின் முதல்வருக்கு குத்ஸிகள் பேரவையின் சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசாக ஷீல்ட் வழங்கப்பட்டது . மேலும் அன்வாருல் குத்ஸிய்யா மதரஸாவில் 100 ஹாஃபிழ்களை உருவாக்கிய மௌலவி அபூபக்கர் தாவூதி பாஃழில் ரஷாதி ஆலிம் அவர்களுக்கு குத்ஸிகள் பேரவை சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசாக ஷீல்ட் வழங்கப்பட்டது. மேலும் சில குத்ஸி ஆலிம்களை கௌரவப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்தப்பட்டது.

அதை தொடர்ந்து விழாவின் முத்தாய்பான கருத்தரங்கம் துவங்கியது. அதை சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கலூரியின் பேராசியர் சொல்லின் செல்வர் M.முஹம்மது அபுதாஹிர் பாக்கவி பாஃழில் தேவ்பந்தி ஆலிம் அவர்களின் தலைமையில் நடுவராய் இருந்து நிகழ்சியை துவங்கி வைத்தார்.
இதில் இன்றய இளைஞர்கள் தடம் புரள்வதற்கு காரணம்
1) ஆன் லைன் மோகமே என்ற தலைப்பில் 
மௌலவி K.நூருல் அமீன் குத்ஸி ADCA ஆலிம் அவர்களும்,
2) போதைக்கு அடிமையானதே என்ற தலைப்பில் 
மௌலவி S.அபு உமாமா குத்ஸி B.com ஆலிம் அவர்களும், 
3) மார்கப்பேணுதல் இல்லாமையே என்ற தலைப்பில்
மௌலவி N.முஹம்மது அன்சால் அலி குத்ஸி B. com ஆலிம் அவர்களும் ,
4) பெற்றோரின் கவனக்குறைவே என்ற தலைப்பில் 
மௌலவி A.இர்ஃபானுல் ஹக் குத்ஸி B.com ஆலிம் அவர்களும் கருத்துறையாற்றினார்கள் .
பிறகு நான்கு தலைப்பையும் கலந்தாய்வு செய்து நடுவர் அவர்கள் அதன்கீழ் சிறப்புறையாற்றினார்கள்.

மௌலவி தௌலத் அலி குத்ஸி ஆலிம் அவர்களால் நன்றியுரை நிகழ்த்த இனிதே விழா நிறைவு பெற்றது.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments