கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் எந்த ஸ்டேஷனில் எல்லாம் நின்று செல்லும். பயணக் கட்டணம் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து நெல்லைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போக சென்னை டூ பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவைக்கும் இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இரண்டு முக்கியமான நகரங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த ரயிலை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். கோவை- பெங்களூர் வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை எட்டு பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.
ரயில் புறப்படும் நேரம்: கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11:30 மணி அளவில் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை திரும்பும்.
கோவை - பெங்களூரு இடையிலான 380 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. வந்தே பாரத் ரயிலில் சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1000ம், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1850 ஆகவும் எனத் தெரிகிறது
பயண நேரம் எவ்வளவு?: தற்போது கோவை - பெங்களூர் ரூட்டில் ஏற்கனவே செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது புதிய வந்தே பாரத் ரயிலில் சென்றால் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடம் மிச்சமாகும். அதாவது 5 மணி நேரம் 40 நிமிடத்தில் போய்விட முடியும். பயண நேரம் கணிசமாக மிச்சம் அடைவதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
எங்கு நின்று செல்லும்: கோவையில் இருந்து பெங்களூருக்கு பல்வேறு ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சென்றால் குறைந்தபட்சம் 7 மணி நேரம் பிடிக்கும். இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூர் போக முடியும் என்பதால் பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.