பட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அண்ணாதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் (மாதிரி) மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊா்வலம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுகன்யா முன்னிலை வகித்தார். அண்ணாதுரை எம்.எல்.ஏ. பள்ளி நூற்றாண்டு விழா கொடியை அறிமுகம் செய்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளியின் முன்னாள் மாணவரும் மூத்த ஆசிரியருமான அ.த.பன்னீர்செல்வம், முன்னாள் ஆசிரியர்கள், அலுவலர்கள் அமைப்பு தலைவர் முத்தையன் மற்றும் பட்டுக்கோட்டை சேவை அமைப்பு பொறுப்பாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசத்துடன் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் பள்ளியில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், மணிக்கூண்டு, அறந்தாங்கி சாலை, காந்தி சிலை சதுக்கம், அண்ணாசிலை, சாமியார் மடம், வடசேரி முக்கம், தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு மைனர் பில்டிங் வழியாக 5 கி. மீட்டர் தூரம் சுற்றி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments