அறந்தாங்கி ரயில் நிலையம் வந்து செல்லும் தொடர்வண்டிகளின் கால அட்டவணை.
அறந்தாங்கி ரயில் நிலையம் வந்து செல்லும் தொடர்வண்டிகளின் கால அட்டவணை. - முழு விவரம்

அறந்தாங்கி ரயில் நிலையம் 

அறந்தாங்கி இரயில் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து கல்லுப்பட்டறை சாலை வழியாக சென்றால் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த இரயில் நிலையம்.

அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகளும் உண்டு. இந்த இரயில் நிலையம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம், ஆலங்குடி, அரிமளம், மறமடக்கி, சிலட்டூர், ஆவுடையார்கோவில், மீமிசல், மணல்மேல்குடி, கோட்டைப்பட்டினம், கட்டுமாவடி,ஏம்பல், கிழாநிலை போன்ற பேரூராட்சி மற்றும் வருவாய் கிராம மக்கள் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஒரு இரயில் நிலையம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய இரயில் நிலையம்.
மூன்று நடைமேடை கள் மற்றும் 4 இரயில் தண்டவாளங்கள் அமைந்துள்ளது. மீட்டர் கேஜ் பாதையில் இரயில் இயங்கிய போது அறந்தாங்கி இரயில் நிலையத்திற்கு திருப்பெருந்துறை என்றே பயணச்சீட்டு வழங்கப்பட்டது..

தற்போது நிலவரப்படி 01.01.2024 அறந்தாங்கி ரயில் நிலையத்தில் 5 ரயில்கள் செல்கின்றன

செல்லும் ரயில்கள் :-

காரைக்குடி மார்க்கம்.

1. வண்டி எண் 20683 செங்கோட்டை அதிவிரைவு ரயில்.

2. வண்டி எண் 06197 காரைக்குடி முன்பதிவில்லா விரைவு ரயில்.

3. வண்டி எண் 07695 ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.

4. வண்டி எண் 16362 எர்ணாகுளம் வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல்.

5. வண்டி எண் 06069 திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.

திருவாரூர் மார்க்கம்.

1. வண்டி எண் 16361 வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல்.

2. வண்டி எண் 07696 செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.

3. வண்டி எண் 06198 திருவாரூர் முன்பதிவில்லா விரைவு ரயில்.

4. வண்டி எண் 20684 தாம்பரம் வாரம் மும்முறை அதிவிரைவு ரயில்.

5. வண்டி எண் 06070 சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் அருள்மிகு ஆத்மநாதர் ஆலயம் செல்லும் பக்தர்கள் அறந்தாங்கி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலமாக எளிதில் ஆலயம் சென்று வரலாம்.

கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் , ஆவுடையார்கோவில், நாகுடி, ஏம்பல், மீமிசல் , திருப்புனவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும்

மற்றும் அப்பகுதிகளில் இருந்து தென்மாவட்ட பகுதிகள் செல்வதற்கும், சென்னை செல்வதற்கும் அறந்தாங்கி ரயில் நிலையம் வந்து செல்லும் ரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடையுங்கள்.

அறந்தாங்கி ரயில் நிலையத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8-00 மணி முதல் பிற்பகல் 2-00 மணி வரை பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்படும்.

பயணிகள் கோரிக்கை


* அறந்தாங்கி ரயில் நிலையம் மீட்டர் கேஜ் காலத்தில் செயல்பட்டு வந்த சரக்கு முனை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

* அறந்தாங்கி ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் ரயில் ‌செல்லும் அளவிற்கு நடைமேடை நீட்டிப்பு செய்ய வேண்டும்

*  மீட்டர் கேஜ் நேரத்தில் இத்தடத்தில் இயங்கி வந்த சென்னை காரைக்குடி இரவு நேர விரைவு இரயிலை(கம்பன் எக்ஸ்பிரஸ்) இருமுனைகளிலிருந்தும் இயக்க வேண்டும்.  ராமேஸ்வரம் - தாம்பரம் புதிய தினசரி பகல் நேர விரைவு ரயில் சேவைகளை துவக்கிட வேண்டும் 

* திருவாரூரிலிருந்து காரைக்குடி மற்றும் மதுரைக்கு பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.

* தாம்பரம்- செங்கோட்டை  இரயில் மற்றும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி  இரயில்களை தினசரி ரயில் சேவைகளாக இத்தடத்தில் இயக்க வேண்டும்.

PC Credit: முத்துப்பேட்டை சூர்யா 

News Credit: ஆலத்தம்பாடி
வெங்கடேசன்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments