கோட்டைப்பட்டினம் பகுதியில் அதிகளவில் சிக்கும் நண்டுகள்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக மீனவர்களில் வலையில் அதிகமாக நண்டுகள் சிக்குகின்றன. இங்கிருந்து பிடித்து கொண்டு வரப்படும் நண்டுகளை தனியார் கம்பெனிகள் வாங்கிச் சென்று அதனை தரம் பிரித்து, அவற்றை உயிருடன் அவித்து நண்டு பகுதியில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் இப்பகுதியில் நண்டுகளை வாங்க அதிக அளவில் வியாபாரிகள் குவிகின்றனர். ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நண்டுகள் விலை போகவில்லை என்று கூறப்படுகிறது. முன்பு ஒரு கிலோ நண்டு ரூ.600-க்கு விற்றது. தற்போது ரூ.400-க்கு மட்டுமே விலை போவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments