கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் டூவீலர் திருட்டு.! மக்களே உஷார்!!கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் இரு சக்கர வாகனம் திருட்டு போனது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரை சேர்ந்தவர் முகமது காசிம். இவருடைய இரு சக்கர வாகனத்தை இரவு நேரங்களில் வீட்டின் அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று முகமது காசிம் தான் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் அந்த வாகனம் மாயமாகி இருந்தது. 

இதனையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த முகமது காசிம் இதுகுறித்து மீமிசல் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அனைவரும் தங்களுடைய இருசக்கர வாகனங்களை பாதுகாப்போடும், பத்திரமாகவும் பார்த்துக் கொள்ளுமாறு GPM MEDIA சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

வண்டி எண்:TN.55 BZ.9284, TVS SCOOTY ZEST (BS IV) வண்டி கலர்: MATTE PURPLE, இந்த நம்பர் உடைய வண்டியை எங்கு கண்டாலும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9865932124

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments