புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவத்தில் குறைவாக மழைப்பதிவு






புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவத்தில் குறைவாக மழைப்பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலம் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் ஆகும். இந்த காலக்கட்டத்தில் மழை அதிகமாக பெய்யும். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பல மாவட்டங்களில் பரவலாக பெய்தது. சென்னை, தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக தென்மாவட்டங்களில் கொட்டிதீர்த்த மழையால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை சற்று குறைவாக தான் பெய்தது. அதிகமாக பலத்த மழை எதுவும் பெய்யவில்லை.

குறைவாக மழைப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையில் சராசரியாக 371.61 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த 3 மாதங்களில் 305.77 மில்லி மீட்டர் அளவு தான் மழை பெய்து பதிவாகியுள்ளது. இது வழக்கமாக பெய்ய வேண்டிய அளவை விட 17 சதவீதம் அளவு குறைவாக மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல தென்மேற்கு பருவ மழை காலக்கட்டத்தில் கடந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களிலும் வழக்கமாக பெய்ய வேண்டிய அளவை விட சற்று குறைவாக தான் பெய்துள்ளது. அதேநேரத்தில் கோடை காலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெய்ய வேண்டிய மழை அளவை விட சற்று கூடுதலாக மழை பெய்துள்ளது. இதேபோல கடந்த ஆண்டில் குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மழை அதிகமாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழையை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. தென் மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை குறைவாக பெய்தது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments