கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் 9-வது ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு..!
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் சமூகநல அமைப்பான GPM மக்கள் மேடையின் 9-வது ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

GPM மக்கள் மேடை என்ற சமூக அமைப்பு கோபாலப்பட்டிணம் மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு பொது சேவைகளை செய்து வருகிறது. இதற்கு முன்பு ஐந்து ஆலோசனை குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு பல லட்சம் மதிப்பிலான திட்டமான மையவாடி சுற்று சுவர் அமைப்பு, குறைந்த விலையில் குடி தண்ணீர் விநியோகம் மற்றும் ஆம்புலன்ஸ் (AMBULANCE) அர்ப்பணிப்பு போன்றவை நிறைவேற்றினர்.

200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இந்த மக்கள் மேடையில் பல நலத்திட்டங்கள் மற்றும் மாதாந்திர வரவு செலவுகளை நிர்வகிக்க ஏழு பேர் கொண்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.  இந்த ஏழு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் உள்நாட்டில் உள்ள இரண்டு பேர் நிரந்தர ஆலோசனை உறுப்பினர்களாக உள்ளனர். மற்ற ஐந்து நபர்களில் இரண்டு நபர்கள் வெளிநாட்டில் வசிப்பவராகவும், மற்ற மூன்று நபர்கள் உள்நாட்டில் வசிப்பவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆலோசனை குழுவின் நிர்வாக காலம் ஒரு ஆண்டு ஆகும்.

அதனடிப்படையில் 2024-ஆம் ஆண்டிற்க்கான ஆலோசனை குழு தேர்வு செய்வதற்காக கடந்த 31.12.2023 அன்று மக்கள் மேடை உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டி அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தநிலையில் உள்நாட்டில் இருந்து ஆலோசனை உறுப்பினர்களாக செயல்பட மூன்று நபர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்த நிலையில் போட்டியின்றி தேர்வு என அறிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து ஆலோசனை குழு உறுப்பினர்களாக செயல்பட இரண்டு நபர்கள் விருப்பம் தெரிவித்தநிலையில் போட்டியின்றி தேர்வு என அறிவிக்கப்பட்டது.

இவ்வாறாக உள்நாட்டு ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஐந்து நபர்களும், வெளிநாட்டு ஆலோசனை உறுப்பினர்கள் இரண்டு நபர்களும் என மொத்தம் ஏழு நபர்கள் 2024-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஆலோசனை குழு உறுப்பினர்களின் பணி சிறக்க GPM மீடியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் கல்வி, அரசு வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அரசு சார்ந்து வரும் திட்டங்களை பெற அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.  

2024-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை குழு உறுப்பினர்கள் விபரம்,

முகம்மது யூசுப்-த/பெ. செய்யது முகம்மது புகாரி-9865292911

அப்துல் சுக்கூர்-த/பெ. அப்துல் கரீம்-9790282250

முகமது முனாபர்-த/பெ.சேகு நூர்தீன்-9789137705

சாகுல் ஹமீது-த.பெ. முகம்மது ராவுத்தர்-+65 82804298

ஹபீப் முகம்மது-த.பெ.  காதர் பாட்சா-9944156288

முகம்மது இப்ராகிம்-தபெ. சாகுல் ஹமீது-95666 54904

அலி அக்பர்/த.பெ.அகமது கபீர்-99760 77262

தகவல்: 9-வது ஆலோசனை குழு, மக்கள் மேடை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments