கோபாலப்பட்டிணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID) பெற விண்ணப்பிக்க அழைப்பு!கோபாலப்பட்டிணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID) பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (UDI) இல்லாதவர்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை (UDI) பெற நேற்று 04/01/2024 பெரிய பள்ளிவாசலில் வருவாய்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோபாலப்பட்டிணத்தில் உள்ள தேசிய அடையாள அட்டை (UDI) இல்லாத ஏராளமான மாற்றுத்திறனாளிகள் புதிய தேசிய அடையாள அட்டை(UDI) பெற இந்த முகாமில் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முகாமில் யாரெல்லாம் தேசிய அடையாள அட்டை (UDI) பெற விண்ணப்பிக்காமல் தவற விட்டார்களோ அவர்கள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தலையாரி லதா அவர்களின் 9159656310 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புதிய தேசிய அடையாள அட்டை(UDI) பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:
1.மாற்றுத்திறனாளி புக் கலர் ஜெராக்ஸ் -1
2.ஆதார் அட்டை கலர் ஜெராக்ஸ்-1
3.புகைப்படம்-2

தகவல்: லதா, தலையாரி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments