வேலூர் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக (தமிழ்நாடு) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... ரயில் மால்டா டவுன் (மேற்கு வங்காளம் )- பெங்களூரு (கர்நாடக) இடையே ஜனவரி 07 முதல் இயக்கம்




கடந்த டிசம்பர் 30ஆம் தேதி 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு வரப் பிரசாதமாக மாறியுள்ளது. இதுதவிர 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸில் ஒன்று தமிழகம் வழியாக செல்கிறது. அவை ரயில் எண் 13434 கொண்ட மால்டா - பெங்களூரு மற்றும் ரயில் எண் 13433 கொண்ட பெங்களூரு - மால்டா ரயில்கள் ஆகும்.

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வழித்தடம்

இதன் வழித்தடத்தை பார்த்தால் மொத்தம் 34 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. முக்கியமான ரயில் நிலையங்கள் என்று பார்த்தால் ராம்பூர், டன்குனி, அந்துல், காரக்பூர், பெல்டா, ஜாலேஸ்வர், பாலசோர், சோரோ, கட்டாக், புவனேஸ்வர், குர்தா ரோடு ஜங்ஷன், பிரம்மாபூர், ஸ்ரீகாகுளம் ரோடு, விஜயநகரம் ஜங்ஷன், விசாகப்பட்டின, ராஜமுந்திரி, தெனாலி, ஓங்கோலே, நெல்லூர், குடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகியவை இடம்பெற்றுள்ளன.


வாரந்தோறும் ஞாயிறு அன்று மால்டா - பெங்களூரு வழித்தடத்தில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிறு காலை 8.50 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அன்று அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும். பெங்களூருவில் இருந்து மால்டா டவுனிற்கு ஸ்லீப்பர் கோச் டிக்கெட் 920 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

தமிழகத்திற்கு முதல் ரயில்

இந்த ரயில் தமிழகத்தில் காட்பாடி, ஜோலார்பேட்டை என இரண்டு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இந்நிலையில் முதல்முறை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு வந்துள்ளது. அதில் பயணித்த பயணிகள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அதாவது, மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயிலில் சில விஷயங்கள் நன்றாக இருக்கின்றன. மிகவும் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.

என்னென்ன வசதிகள்

பயண களைப்பு என்பது பெரிதாக இல்லை. புஷ் புல் முறையில் ரயில் இயக்கப்படுவதால் அம்ரித் பாரத் ரயிலின் பிக்கப் நன்றாக இருக்கிறது. இதன்மூலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைக்கும் அனுபவத்தை இதில் பெற முடியும் என்று கூறினர். ஒவ்வொரு இருக்கைக்கும் வாட்டர் பாட்டில்கள் வைக்கும் வகையில் ஹோல்டர்கள், மொபைல் சார்ஜர்கள் உள்ளன. கை கழுவும் இடத்தில் காலில் மிதித்தால் தண்ணீர் வரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் மகிழ்ச்சி

சீட்களில் குஷன் வசதிகள் நன்றாக இருக்கிறது. மின் விசிறிகள் மேம்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சாமானியர்கள் பயணிக்க பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. கழிவறை வசதிகளும் நன்றாக உள்ளன என்று பயணிகள் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments