கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் 9-ந் தேதி நடக்கிறது




கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 9-ந் தேதி நடக்கிறது.

பிரசார விழிப்புணர்வு வாகனம்

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து வருகிற ஜனவரி 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 26 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதிற்கு கீழ் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இந்த போட்டியினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார விழிப்புணர்வு வாகனம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செல்ல உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 9-ந் தேதி பிரசார விழிப்புணர்வு வாகனம் வர உள்ளது.

மாரத்தான் ஓட்டம்

இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் (5 கி.மீ.) ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் (வயது வரம்பு கிடையாது) 9-ந் தேதி காலை 6.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை 9-ந் தேதி காலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் தொடங்கி ெரயில்நிலையம், ரவுண்டானா, மாலையீடு, டிவிஸ், மாட்சிமைதங்கிய மன்னர் கல்லூரி சாலை, அண்ணாசிலை, நகராட்சி சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டரங்க வளாகம் வந்தடைகிறது.

இந்த ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரர்கள் அன்று மாலை 3 மணியளவில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி லோகோ, சின்னம், கருத்துரு பாடல், காட்சிப்படுத்தும் முக்கிய விழா நிகழ்ச்சி நடைபெறும் விழா அரங்கில் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments