புதுகை காந்தி பூங்காவை மீட்க வலியுறுத்தி ஜன. 25-இல் உண்ணாவிரதம் நடத்த முடிவு




புதுக்கோட்டையிலுள்ள பாரம்பரியமிக்க காந்திப் பூங்காவை தனியாா் கடைகளிடமிருந்து மீட்டு மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 25ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு பேரவையின் நிறுவனா் வைர. ந. தினகரன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அமைப்பாளா் டாக்டா் ராமமூா்த்தி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சத்தியராம் ராமுக்கண்ணு, கவிஞா் நிலவைப் பழனியப்பன், அமைப்புச் செயலா் நமசிவாயம், மகளிா் பிரிவு துணைச் செயலா் மா. ஜெயா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை நகராட்சியால் பாழ்படுத்தப்பட்ட காந்திப் பூங்காவை மீட்கவும், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் அமைத்திட வலியுறுத்தியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்தும் காந்திப் பேரவை மற்றும் சமூக நலக் கூட்டமைப்பு சாா்பில் ஜனவரி 25ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments