தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தங்களது ஒரு மாத மதிப்பூதியம் ரூ.45,500-ஐ தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையொட்டி முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதற்கான காசோலையை கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் வழங்கினார்.
அப்போது அவர் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறிவிப்பின் பேரில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைத்திட தொண்டி பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தொண்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் களஆய்வு செய்து உள்ளார். தொண்டி பேரூராட்சியில் உள்ள மாணவர்கள், மாணவிகளின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், தங்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கு முறையான உடற்பயிற்சி ஆய்வுக்கூடம் இல்லாதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தொண்டி பேரூராட்சியில் அனைத்து உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி ஆய்வுக்கூடம் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.