கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விழிப்புணர்வு மாரத்தான்




தமிழகத்தில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடர்பாக விழிப்புணர்வு பிரசார வாகனம் நேற்று புதுக்கோட்டை வந்தது. இதையொட்டி கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கி ரெயில் நிலையம் ரவுண்டானா, மாலையீடு, டி.வி.எஸ்., மன்னர் கல்லூரி சாலை, அண்ணாசிலை, நகராட்சி சாலை, கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டரங்க வளாகம் வந்தடைந்தது. இதில் வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டு ஓடினர். முன்னதாக மாரத்தானை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஷியாமளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments