கீரமங்கலம் அருகே சாக்லெட் என்று நினைத்து சாயப்பொடியை சாப்பிட்ட மாணவர்களால் பரபரப்பு




கீரமங்கலம் அருகே ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தான் வைத்திருந்த ஒரு பாக்கெட்டை பிரித்து சாக்லெட் பொடி என்று சக மாணவர்கள் 4 பேருக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட வாயில் போட்டுள்ளார். அப்போது அந்த பொடியில் இனிப்பு இல்லை நாக்கு நிறம் மாறியுள்ளது. மாறாக பொடியை தொட்டவர்களின் கைகளும் நிறம் மாறியுள்ளது. இதனைப் பார்த்த அந்த வேனில் சென்ற ஆசிரியைகள் மற்றும் கிளீனர் ஆகியோர் மாணவர்கள் வைத்திருந்த பாக்கெட்டை வாங்கிப் பார்த்தனர். அப்போது அது துணிகளுக்கு சாயம் போவதற்கு பயன்படுத்தும் பவுடர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments