முக்கண்ணாமலைப்பட்டி தர்காவில் வழிபாடு நடத்தி பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மேட்டுப்பட்டி, புதுநகர் காலனி, வேளாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தொறும் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில் அவர்கள் பழனி பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக முதலில் முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள மலைமீது அமைந்துள்ள முகைதீன் ஆண்டவர்மலை தர்காவில் சிறப்பு வழிபாடு செய்வார்கள். அதன்படி நேற்று அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள முகையதீன் ஆண்டவர்மலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர். மதநல்லிணக்கத்திற்க எடுத்துக்காட்டாக பக்தர்கள் தர்காவில் வழிபாடு நடத்தியதும், அவர்களை முஸ்லிம்கள் வழியனுப்பி வைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments