கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள சின்ன பட்டமங்கலம் கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு




ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள சின்ன பட்டமங்கலம் கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதில், இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு செல்ல மாணவர்களும், ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கும் கூட சாலை வசதி இல்லை என்று கூறி அவர்கள் கிராமத்திற்குள் வரமறுத்து விடுகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சீரமைத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments