தென்காசி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அவ்வூராட்சித் தலைவா் உள்பட 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கேரள மாநிலம் கொல்லத்தை சோ்ந்தவா் ரெஜினிஸ் பாபு(44).இவரது உறவினா் வந்தனா அமெரிக்காவில் வசித்து வருகிறாா். இவருக்காக குத்துக்கல்வலசை ராஜாநகா் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி கோரி, ஊராட்சி அலுவலகத்தில் ரெஜிஸ்பாபு விண்ணப்பித்துள்ளாா்.
அவரிடம், வரைபட அனுமதிக்கான அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.59,290 மற்றும் லஞ்சமாக ரூ.46 ஆயிரம் (2 சதவீதம்) வேண்டும் ஊராட்சித் தலைவா் சத்தியராஜ் கேட்டாராம்.
இதுகுறித்து, தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் ரெஜனிஸ் பாபு புகாா் செய்தாா். போலீஸாா் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ. 40 ஆயிரத்துக்கான நோட்டுகளை, ஊராட்சித் தலைவரிடம் அவா் கொடுத்துள்ளாா்.
அந்தப் பணத்தை அங்கிருந்த ஒப்பந்ததாரா் செளந்தராஜனிடம் கொடுக்குமாறு ஊராட்சித் தலைவர கூறினாராம். அப்போது, அங்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி அடங்கிய குழுவினா் ஊராட்சித் தலைவரையும், ஒப்பந்ததாரா் செளந்தரராஜனையும் கைது செய்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.