கோபாலப்பட்டிணத்தில் குர்ஆன் ஹதீஸ் தாஃவா குழு நடத்தும் பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி
கோபாலப்பட்டிணத்தில் குர்ஆன் ஹதீஸ் தாஃவா குழு நடத்தும் பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறுகிறது 

இது குறித்து குர்ஆன் ஹதீஸ் தாஃவா குழு நடத்தும் செய்திக்குறிப்பில் 

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் மார்க்கத்தை,மறுமை வாழ்வை  நினைவூட்டும் விதமாகவும் இஸ்லாத்தில் இருக்கும் சந்தேகங்களை போக்குவதற்கு முயற்சிக்கும் விதமாகவும் பயான் நிகழ்ச்சியும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் கோபலப்பட்டினம் குர்ஆன் ஹதீஸ்  தாஃவா குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மௌலவி.அப்பாஸ் அலி (பேராசிரியர்.மர்யம் பெண்கள் அரபிக் கல்லூரி-மதுரை) அவர்கள் கலந்து கொண்டு மரணமும் மறுமையும் என்கிற தலைப்பில் மார்க்க சொற்பொழிவும் நமக்கு ஏற்படும் மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள்.

நபிமொழிகளை மறுக்கும் TNTJ - வினர்  மீதான மார்க்க தீர்ப்பு என்ன?

அஜ்வா பேரிச்சம்பழம்,சூனியம் மற்றும் கண்ணேறு குறித்தான ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை பற்றி TNTJ வினர் கூறும் தவறான விளக்கத்திற்கு சரியான விளக்கம் என்ன? 

 வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தவணை திட்டத்தில் 
வாங்கலாமா?

உடல் உறுப்பு தானம் செய்யலாமா ?

மேலும் இது போன்ற மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை பெற  நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் - 15-01-2024 திங்கள் கிழமை 
மாலை 4.30 முதல்
இடம்- தங்க மஹால் திருமண மண்டபம் கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments