இலவச ஆம்புலன்ஸ் சேவை நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்தார்




தொண்டியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவச ஆம்புலன்ஸ் சேவை விழா நடந்தது. நவாஸ்கனி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை

தொண்டியில் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொண்டி சமூக நல அறக்கட்டளை மற்றும் வி.கார்டு நிறுவனம் இணைந்து தொண்டி பேரூராட்சியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமை தாங்கினார். திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன், வி.கார்டு நிறுவன மேலாளர் அப்துல் ரஹீம், திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தொண்டி சமூக நல அறக்கட்டளை செயலாளர் நவ்பல் ஆதம் வரவேற்றார்.

விழாவில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் திருவாடானை தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், தொண்டி அமீர் சுல்தான் அகாடமி பள்ளி தாளாளர் அப்துல் ரவூப் நிஸ்தார், தொண்டி பங்கு தந்தை வியாகுல அமிர்தராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெனிபர் நிஷா, தாஸ், செய்யது அபுதாகிர், காத்த ராஜா, ரவிக்குமார், ரஹ்மத் குபுராபீவி, மும்தாஜ்பீவி, பெரியசாமி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டி பகுதி அனைத்து கிராமத்தலைவர்கள், தொண்டி ஜமாத்தார்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், தனியார் மின் பணியாளர் சங்கத்தினர் மற்றும் தொண்டி பேரூராட்சி அனைத்து சமுதாய பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தொண்டி சமூகநல அறக்கட்டளை தலைவர் ஜவகர் அலிகான் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments