மணமேல்குடி ஒன்றியத்தில் டிட்டோ ஜாக் கூட்டமைப்பு சார்பாக மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்




டிட்டோ ஜாக் கூட்டமைப்பு சார்பாக மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் டிட்டோஜாக் வட்டார ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக ஆசிரியர் கூட்டணி  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* ஆகிய ஐந்து இயக்கங்களைச் சார்ந்த வட்டார பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சுமார் 70 பேர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் 1.சிபிஎஸ் திட்டத்தை ஒழிக்க வேண்டும் 2.அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் 3.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்
4. சரண்டர் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் 5.ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் முழக்கமிடப்பட்டன நிறைவில் வட்டார துணை ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் நன்றி கூறினார்










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments