முத்துப்பேட்டையில் தமுமுக சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்..! பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி காலை 7மணியளவில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் ஆசியா அளவில் மூன்று தங்கப்பதகங்கள் பெற்ற H.M.R.முகமது இதிரிஸ் அவர்கள் துவங்கி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக A.K.S.விஜயன் Ex.mp(தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி), பூண்டி கே. கலைவாணன் MLA(திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர்), மாரிமுத்து MLA, S.M.ஹைதர் அலி(அல் மஹா ட்ரஸ்ட்), தைக்கால் I.முபாரக்(மாநில செயலாளர் தமுமுக), வழக்கறிஞர் L.தீன் முகமது(மக்கள் உரிமை & நுகர்வோர் பாதுகாப்பு அணி செயலாளர் தமுமுக), SMI மாநில துணை தலைவர் திருச்சி K.அப்பீஸ் கான், M.முஜிபுர் ரஹ்மான்(மாவட்ட செயலாளர் தமுமுக) ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இப்போட்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் K. செய்யது அகமது கபீர் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.15000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.10000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும், ஆறுதல் பரிசாக ஐந்து நபர்களுக்கு தலா ரூ.1000/- வழங்கப்படவுள்ளது.

இந்த மாரத்தானில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமுமுக மற்றும் SMI முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை தமுமுக & சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் 2ம் ஆண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

மாரத்தான் போட்டிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும் :


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments