எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்: போலீசாரின் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கினார்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் முதல் இடம் பிடித்தவருக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.11 ஆயிரமும், 3-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.7 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்களில் முதல் இடம் பிடித்தவருக்கு ரூ.13 ஆயிரமும், 2-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.9 ஆயிரமும், 3-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரமும் என மொத்தம் 19 நபர்களுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments