எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்த கோட்டைப்பட்டினம் 12 மீனவர்களுக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்
இலங்கை கடற்படை கைது செய்த கோட்டைப்பட்டினம் மீனவர்களுக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து அனுமதி பெற்று 200 விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதில் யாசிர் அராபத் விசைப்படகில் நான்கு மீனவர்களும், சாம்ராஜ் விசைப்படகில்  நான்கு மீனவர்களும், ஆரோக்கியராஜ்  விசைப்படகில் நான்கு மீனவர்களும் மொத்தம் 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே  மீன்பிடித்து இருக்கும்பொழுது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக   மூன்று படகையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து  காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கஜபதிபாலன் மீனவர்களை வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 12 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் மீனவர்களை சிறையில் அடைத்ததால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments