நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4வழிச்சாலை அப்டேட்ஸ்




தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அதிக அளவில் சாலை விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பெருகி வரும் வாகனத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்தவும், புதிய சாலைகள் அமைக்கவும் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை நான்கு வழி கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் ஒரு பகுதியாக நாகை முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

பசுமை 4 வழிச்சாலை

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.9,000 கோடியில் 312 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 90% பசுமை வழிச்சாலை என்பதால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. அதன்படி, இந்த பசுமை வழிச்சாலையில் 37 பெரிய பாலங்கள், 55 சிறிய பாலங்கள், 690 சிறிய கால்வாய் நீரோடை பாலங்கள் அமைய உள்ளன.

நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பசுமை வழிச்சாலையால் பெரியளவில் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே தயாரித்துள்ளது. மேலும் , தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல இந்த பாதை மாற்று வழியாக அமையும் என கூறப்படுகிறது.
 
இதனை கருத்தில் கொண்டே தற்போது, சாலை அமைப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

5 கட்டங்களாக இந்த பசுமை வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 2 பணிகளுக்கு இந்த ஆண்டே டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்ததாரர்கள் பணியை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த பின்னர், தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இது குறித்து Indian Constitution நிறுவனம் நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை‌ 4 வழிச்சாலயின்  வரைபடத்தை வெளியிட்டுள்ளது


Source : Indian Construction Info

Source Article 










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments