விடைபெற்றது பருவமழை கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளம் காட்டுக்குளம் எவ்வளவு தண்ணீர் உள்ளது வாங்க பார்க்கலாம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் குளங்களான  நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம்  உள்ளது.

கடந்த (2019 முதல் 2021 வரை) 3 ஆண்டுகள் நல்ல பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.

காட்டுக்குளம் - நெடுங்குளம்

கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம் நெடுங்குளத்தை மக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக வருடம் ஒருமுறை அல்லது இரண்டு வருடம் ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது ‌வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2022 வருடம் நவம்பர் மாதத்தில் இரண்டு குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. 

காட்டுக்குளம்







காட்டுக்குளத்தில்  கடந்த 2022 வருடம் தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றப்பட்ட நிலையில் வரண்டு காணப்பட்டது.இதனால் மக்கள் குளிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் 2023  மே மாதத்தில் கோடை மழை பெய்த காரணமாக  ஒரே நாளில் காட்டுக்குளத்தில் தண்ணீர்  மெல்ல, மெல்ல நிரம்பியது. 

இதனிடையில் மே 04 நாள் அடைமழை பெய்தது. அப்பொழுது மழை நீர் அனைத்தும் குளத்திற்கு செல்ல வழியில்லாமல் கடலுக்கு சென்றது. மன்னனின் மைந்தர்கள்    கொட்டும் மழையில் இளைஞர்களை அழைத்துக்கொண்டு வீணாக கடலுக்கு செல்லும் மழைநீரை குளத்திற்கு செல்லும் வகையில் சொந்த பொருளாதாரத்தில் மணல் மூட்டைகளை கொண்டு அடைத்து மழைநீரை குளத்திற்கு செல்ல வழிவகை செய்து காட்டுகுளம் முழு கொள்ளளவை அடைய காரணமாக இருந்துள்ளனர். தற்போது மக்கள் குளித்து வருகின்றார்கள் 

தற்போது நிலவரப்படி  காட்டுக்குளத்தில் வடகிழக்கு பருவமழை மழை காரணமாக ஒரு சில அடி உயர்ந்துள்ளது 

நெடுங்குளம்







நெடுங்குளத்தில்  கடந்த 2022 வருடம் தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றப்பட்ட நிலையில் வறண்டு காணப்பட்டது.இதனால் மக்கள் குளிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கோடை மழை & பருவமழை காலத்தில் பெய்த காரணமாக  குளங்களில் தண்ணீர்  மெல்ல, மெல்ல நிரம்பியது. இதனிடையில் மே 04 நாள் அடைமழையும் பெய்தது. இதன் காரணமாக தற்போது வரை கால் பாதி வரை தான் தண்ணீர் உள்ளது. 

தற்போது பருவமழை  முடித்துள்ளதால்  வரக்கூடிய கோடை காலத்தில் மழைப்பெய்து எப்போது நெடுங்குளம் நிரம்பும் ஏக்கத்தில் உள்ளார்கள் 

மேலும் வெளிநாட்டில் வெளியூரில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் கோபாலப்பட்டிணம் உறவுகள் நாம் எப்பொழுது ஊருக்கு வந்து நண்பர்கள் சேர்ந்து குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் உள்ளார்கள்.

வெளிநாடு வெளியூர் வாழ் கோபாலப்பட்டிணம் மக்கள் மழை பெய்து இரண்டு குளங்களும் முழு அளவில் நிரம்ப வேண்டும் பிரார்த்தனை செய்யுங்கள்..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments