அதிராம்பட்டினத்தில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை பறக்கும் மீன்




அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று மீனவர் ஒருவர் வலையில் அரிய வகை மீனான பறக்கும் மீன் சிக்கியது. அந்த மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இதை மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். இதைப்பற்றி மீனவர்கள் கூறுகையில், ‘பறக்கும் வகை மீன் நமது பகுதி கடலில் கிடைப்பது அரிது. இது பெரும்பாலும் அரபிக்கடல் பகுதியில்தான் அதிகம் கிடைக்கும். இறக்கை இருப்பதால் ஐந்து அடி தூரம் வரை பறக்க கூடியது. அதனால் பறக்கும் மீன் என்று அழைப்பார்கள். தற்போது விற்பனைக்கு வந்துள்ள பறக்கும் மீன் ரூ.250-க்கு விற்பனையானது’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments