மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; ஒருவா் உயிரிழப்பு
மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே முத்துக்குடா கிராமத்தை சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊரில் இருந்து மீமிசல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இப்ராஹிம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இப்ராஹிம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேன் டிரைவர் சேமங்கோட்டை பகுதியை சேர்ந்த அருளானந்து மகன் யோவான் (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments