முத்துப்பேட்டையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்




முத்துப்பேட்டையில் த.மு.மு.க. மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு நகர துணை தலைவர் மன்சூர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் சமது, மாரிமுத்து, பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், மற்றும் பலர் பேசினர்.

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை ஆசிய அளவில் நடந்த போட்டிகளில் 3 முறை தங்கப் பதக்கங்களை பெற்ற ஓட்டப்பந்தய வீரர் முகமது இதிரிஸ் தொடங்கி வைத்தார். முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். இந்த மாரத்தான் ஓட்டம் முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஆசாத் நகர், பழைய பஸ் நிலையம், நியூபஜார், கொய்யாமுகம், பங்களாவாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு, மங்களூர் பைபாஸ் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கோவிலூர் ரவுண்டானா, ஆலங்காடு வழியாக திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடினர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments