அனைவரும் பங்கேற்கும் வகையில் ஜன.26 குடியரசு தினத்தன்று கிராம சபை நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் அரசுப் பள்ளிகளின் மேம்பாடு: கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்
குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, ஜன.26ம் தேதி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக்கூட்டம் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஜன.26-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் அரசுப் பள்ளிகளின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என அதிகாரிகள், ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, ஜன.26-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், கிராம ஊராட்சி தலைவா், ஊராட்சி உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய தலைவா், துணை, உறுப்பினா்கள், தொகுதி எம்எல்ஏக்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலா்கள் பங்கேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களில், பள்ளிக் கல்வி சாா்பில் அதிகாரிகள் அல்லது உள்ளூா் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடா்புடயை ஊராட்சி பகுதிகளில், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக தூய்மை பணிகள் போன்றவை குறித்து ஆசிரியா்கள் பேச வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

agenta
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments