கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை
கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருகிறது 

18.1.24 தெற்கு இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் ஒரு தற்காலிக கீழ் அடுக்கு சுழற்சியானது உருவாக இருக்கிறது. ஆகையால் தூத்துக்குடி , திருநெல்வேலி  மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழைக்கு நாளை வாய்ப்புகள் உள்ளது இவை போக தென் உள் மாவட்ட பகுதிகளின் சில இடங்கள் உட்பட தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழையானது பதிவாகும். அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு குறிப்பாக ஜனவரி 21 ஆம் தேதி வரையில் தென்கடலோர மாவட்ட பகுதிகள் மற்றும் டெல்டாவின் கடலோர மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சாரல்/தூறல் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது. ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகலாம். என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 19.01.2024 வெள்ளிக்கிழமை தீடீரென காலை 5.30 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து இடைவிடாது விட்டு விட்டு மழை நீண்ட நாட்களுக்கு பிறகு  பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது.  

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments